Book Online Tickets for Aadi Amavasya 2021, Chennai. Aadi Amavasai: A Special New Moon to Honor Our Ancestors
Amavasai or New Moon day happens to be the last day of the moon in its waxing phase and is not visible to the human eye. Aadi is the Tamil month corresponding to mid-July – mid-August. Du

Aadi Amavasya 2021

 

  • Aadi Amavasya Essential Package

    Sale Date Ended

    INR 1050
    Sold Out
  • Aadi Amavasya Enhanced Package

    Sale Date Ended

    INR 2475
    Sold Out
  • Aadi Amavasya Advanced Package

    Sale Date Ended

    INR 6225
    Sold Out

Invite friends

Contact Us

Page Views : 120

About The Event

Aadi Amavasai: A Special New Moon to Honor Our Ancestors

Amavasai or New Moon day happens to be the last day of the moon in its waxing phase and is not visible to the human eye. Aadi is the Tamil month corresponding to mid-July – mid-August. During the month of Aadi, the Sun moves towards the South, and this is known as Dakshinayana. Being the first new moon day during this period, Aadi Amavasai is believed to be very powerful and auspicious.

On Aadi Amavasai, Hindus perform Aadi Amavasai Tharpanam/Pitru Pooja. It is a ritual for their departed ancestors that is believed to appease them and help them achieve Moksha. Some souls do not leave the world after death. If they have unfulfilled desires, they may wander in limbo, not able to attain Moksha or liberation. By doing Tarpanam rituals for them, we can satisfy them, and they will also attain Moksha. It is a sacred obligation for Hindus to perform tarpanam. As we exist on earth because of our ancestors, tarpanam is also a ritual of thanksgiving for them and a way of honoring them. Such rituals are found in several cultures. The Catholics observe All Souls’ Day for the same reasons. The need to remember and honor ancestors is integral to all religions and cultures.

 Hindus believe that their ancestors live in Pitru Loka and that the 64 generations of dead ancestors can help them to solve their life problems if they are duly remembered and honored. On the other hand, if they are not honored, they will be displeased and cause many problems in a person’s life. Hence devout Hindus try to observe these rituals to avoid incurring their ancestors’ displeasure and anger. Pitru Dosha or ancestral curse is a serious affliction in a horoscope. One of the most common Pitru Dosha occurs when the ancestors curse their own family because they did not perform tarpanam. Pitru Dosha can have many adverse consequences like poverty, illness, strained relationships, delay in marriages, repeated miscarriages, mental problems, etc.

Please Your Ancestors on Aadi Amavasai

On the day of Aadi Amavasai, one should make offerings of sesame seeds and water. This will make the ancestors happy, and they will shower their blessings on you. These offerings are for three generations of ancestors on both the maternal and paternal sides. The deities associated with Pitrus are Vasu, Rudra, and Aditya. Mantras are chanted to invoke them. This ensures that our offerings reach the ancestors. The deities transport the food to the Pitrus, and they accept it.

 As per the Mahabharata, humans need to clear three debts before they die.

· Dev rin - This debt is for Lord Vishnu. It can be cleared by doing acts of charity and donating materials.

· Rishi rin - This debt is for Lord Shiva. It can be cleared by seeking scriptural knowledge and sacred understandings.

· Pitru rin - This is for Lord Brahma. It is cleared by doing tarpanam or Shraddha for ancestors.

 Significance of Aadi Amavasai Tharpanam

Why do we need to worship our ancestors even after they have left us? If we don’t, we can face many difficult situations that can make our lives miserable. This is due to the bad karma that we have inherited from our ancestors. We can get rid of it and also solve our problems by performing tarpanams and shraddhas.

 Rameswaram is one of the most auspicious and sacred places for performing Pitru tarpanams. It is said that Lord Rama performed Shraddha for his father, King Dasaratha and his Suryavanshi ancestors here. Hence, performing tarpanam here on Amavasya day is ideal. This is also a Mukthi kshetram (salvation temple).

The ritual of tarpanam can destroy curses and effects of black magic. It can foster happiness in your life and bestow success. When you perform this ritual, you can please your ancestors who will bless you so that you can lead a happy, prosperous, and peaceful life.  

Why Pitru Tarpanam?

· Fame and success in personal and professional life

· Longevity and happiness

· Freedom from debts and financial problems

· Destruction of enemies

· Removes the effects of curses, black magic, and sorcery

· Creates tranquility and prosperity

· Bestows good fortune 

Aadi Amavasai 2021 date is on August 8.

நீத்தார் கடன்

நீத்தார் கடன் என்பது காலம் சென்ற முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய விசேஷ வழிபாட்டைக் குறிக்கிறது. நம்மைப் பெற்று, வளர்த்த பெற்றோர்களுடன் கூட, அவர்களுடைய பெற்றோர்கள், நம் குடும்ப மூதாதையர்கள் போன்ற அனைவருக்கும் நாம் பல வகையிலும் கடன் பட்டுள்ளோம். இந்தக் கடனை நம் வாழ்நாளில் திருப்பிச் செலுத்துவது என்பது, நமக்கு உள்ள கடமைகளில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இதனை, சடங்குகள், வழிபாடுகள் மூலம், பித்ருக்கள், நீத்தார் என்றெல்லாம் அழைக்கப்படும் இறந்து போன நம் முன்னோர்களுக்குச் செலுத்துவதற்கு மிக உகந்த தினமாக, ஆடி அமாவாசை விளங்குகிறது.

அமாவாசை

அமாவாசை எனப்படும் அமாவாசை திதி, ஒரு புண்ணிய தினமாகும். சூரியனும், சந்திரனும் இணையும் இந்த நாளில், வானில் சந்திரனைக் காண முடியாது. ஆயினும், இந்த நாளிலேயே சந்திரன் மீண்டும் வளரத் தொடங்குவதால், வளர்பிறை எனப்படும் மங்களகரமான காலப்பொழுது, இந்த அமாவாசையில் துவங்குகிறது. எனவே, எந்த முக்கியச் செயலையும் தொடங்குவதற்கு அமாவாசை உகந்த நாளாக விளங்குகிறது. இந்த அமாவாசை, நீத்தார் கடன், அதாவது முன்னோர்கள் வழிபாட்டிற்கும் ஏற்ற ஒன்றாகத் திகழ்கிறது.  

ஆடி மாதம்

புனிதமான மாதமாகக் கருதப்படும் ஆடி, கடவுள் வழிபாட்டுக்கும், குறிப்பாக பெண் தெய்வங்களான அம்மன் வழிபாட்டுக்கும் உகந்ததாக விளங்குகிறது. வட திசையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சூரியன், இந்த மாதத்தில் தென் திசையை நோக்கி, தன் பயணத்தைத் தொடங்குகிறார். தட்சிணாயனம் எனப்படும் இந்த 6 மாத காலம், ஆடி மாதத்தில் தான் துவங்குகிறது. எனவே, ஆடி மாதப் பிறப்பு என்பது, தட்சிணாயன புண்ய காலத்தின் துவக்கமாகவும் அமைகிறது. மேலும், ஆடி மாதம் முதல் தை மாதம் வரையிலான காலகட்டத்தில், உயிர் நீத்த நம் முன்னோர்கள், நம்மைக் கண்டு, ஆசீர்வதிப்பதற்காக, அவர்கள் இருக்கும் பித்ரு லோகத்திலிருந்து, பூலோகத்திற்கு வருவதாக புனித நூல்கள் கூறுகின்றன. அவர்கள், ஆடி அமாவாசை அன்று தான், தங்கள் உலகத்திலிருந்து, பூமியை நோக்கிக் கிளம்புவதாகவும் கூறப்படுகிறது. எனவே, நம்மைக் கண்டு மகிழ்ந்து, நமக்கு ஆசி வழங்குவதற்காக வரும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி அமாவாசை நாளில், அவர்களுக்குத் தர்ப்பணம் போன்ற சடங்குகள் செய்து, முன்னோர்களை நன்றியுடன் வணங்குகிறோம்.

இது போல, மகாளய அமாவாசை அன்று மூதாதையர்கள் பூலோகத்திற்கு வந்து சேர்வதாகவும், தை அமாவாசை அன்று பித்ரு லோகம் திரும்ப, அவர்கள் இங்கிருந்து கிளம்புவதாகவும் சொல்லப்படுவதால், அவர்களுக்காக இந்த நாட்களிலும் தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது.

ஆடி அமாவாசை

இதிலிருந்து, அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாட்டுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பதை நன்கு உணரலாம். ஆடி அமாவாசை என்பது, புனிதமான ஆடி மாதத்தில் வரும் அமாவாசை ஆதலால், நம் மூதாதையர்களை வழிபட்டு அவர்கள் ஆசி பெறுவதற்கு மிகவும் ஏற்ற நாளாக இது விளங்குகிறது.                         

இந்த நாளில், புண்ணியத் தலங்களில் உள்ள கடல், ஆறு, குளம் போன்ற தீர்த்தங்களில் மக்கள் புனித நீராடி, தர்ப்பணம் போன்ற சடங்குகள் செய்து, முன்னோர்களை நன்றியுடன் வணங்குகிறார்கள். பலர், காலம் சென்ற குடும்பப் பெரியவர்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்களை படைத்து, அவர்களுக்குத் ‘திதி’யும் கொடுக்கிறார்கள். பலர், அன்று காலைப் பொழுதில் உண்ணாமல் உபவாசம் இருந்து, முன்னோர்களை வணங்கி, ஆடி அமாவாசை விரதம் மேற்கொள்கிறார்கள்.

ஆடி என்பது, அம்மனுக்கு உகந்த மாதம் ஆகையால், பெண்கள் பலர் அம்மனுக்கு விரதம் இருந்து, தங்கள் கணவர், குழந்தைகள் ஆகியவர்களின் நீண்ட ஆயுள், நல்வாழ்விற்காக நோம்பு நோற்கிறார்கள். பலர் அன்று அம்மனுக்குக் கூழ் படைக்கிறார்கள். ஆடி அமாவாசை அன்று அம்மனுக்குக் கூழ் வார்த்தால், ஆயிரம் ஆண்டுகள் கூழ் வார்த்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆடி அமாவாசை வழிபாட்டுப் பலன்கள்   

முன்னோர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும், அவர்களது ஆசிகள் பெரும் நன்மைகளைத் தரக் கூடியவை என்றும் புராணங்கள் கூறுகின்றன. ஆடி அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவதன் முலம், அவர்களது அபாரமான ஆசீர்வாதங்களைப் பெறலாம். இதன் வழியாக, நமக்கும், நமக்கு நெருங்கியவர்களுக்கும் நீண்ட ஆயுள், நல்லாரோக்கியம், செல்வம், பல்வகை வளம் என அனைத்தும் கிடைக்கப் பெறும்.

இவ்வாறு, ஆடி அமாவாசை வழிபாடுகள் நாம் நல்வாழ்வு வாழ வகை செய்யும்.   

More Events From Same Organizer

Similar Category Events