Maha Rudra Chandi Yagam 2019
Sale Date Ended
அன்புடையீர்,
உலக மக்களின் நலன் வேண்டி நிகழும் மங்களகரமான விகாரி வருடம் புரட்டாசி மாதம் 5ம் நாள் (22-09-2019) ஞாயிற்றுக்கிழமை அஷ்டமி திதி மிருகசீரிஷம் நட்சத்திரம் கூடிய சுபயோக தினத்தில் நந்தி வீரர் ஆன்மீக திருப்பணி குழுவினரால் சென்னையின் A.M ஜெயின் கல்லூரி வளாகத்தில் மஹா ருத்ர சண்டி யாகம் செய்விக்க திருவருள் கூடியுள்ளது.
திருவலம் ஸ்ரீ சர்வமங்களா பீடம் சாக்தஸ்ரீ ஸாந்தா சுவாமிகளின் தலைமையில் 51 சிவாச்சாரியர்கள் ஒன்றுகூடி, இருபத்தைந்து சைவ & வீரசைவ ஆதீனங்கள் அருளாசியுடன் வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் மிக பிரம்மாண்டமான மஹாசண்டி யாகம் நந்தி வீரர் ஆன்மீக திருப்பணி குழுவினரால் நடத்தப்பட இருக்கிறது.